29 லட்சம் பேரை பாதுகாக்க முடிந்தது: உயிர்காத்த ஊரடங்கு -மத்திய அரசு..!

68 ஆயிரம் உயிரிழப்புகளை ஊரடங்கு தவிர்த்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

29 லட்சம் பேரை பாதுகாக்க முடிந்தது: உயிர்காத்த ஊரடங்கு -மத்திய அரசு..!
மாதிரி படம் (Reuters)
  • Share this:
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்றில் இருந்து 29 லட்சம் பேரை காக்க முடிந்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்புக்காக திட்டமிடப்படாமல் ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்டதாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதற்கு மத்திய அரசு அதிகாரபூர்வ விளக்கத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

பாஸ்டன் கண்சல்டிங் குரூப் என்ற அமைப்பின் தகவல்படி ஊரடங்கு காரணமாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேரின் உயிரிழப்பு வரை காக்கப்பட்டுள்ளதாகவும், 36 முதல் 70 லட்சம் பேருக்கு பெருந்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.


பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பின் ஆய்வின்படி 78 ஆயிரம் பேரை கொரோனா மரணத்தில் இருந்து ஊரடங்கு காப்பாற்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான 2 பொருளாதார வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் 23 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து காக்கப்பட்டிருப்பதாகவும், 68 ஆயிரம் பேர் வரை உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புள்ளியியல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்விலும் ஊரடங்கு காரணமாக 20 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து தப்பியுள்ளதாகவும், 54 ஆயிரம் பேர் உயிரிழக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு அறிவித்து ட்வீட் செய்துள்ளது.Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம். 
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading