கொரோனா நிதி குறித்து இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை - முதல்வர் நாராயணசாமி புகார்!

கொரோனா நிதி குறித்து இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை - முதல்வர் நாராயணசாமி புகார்!
முதல்வர் நாராயணசாமி
  • Share this:
கொரோனா நிதி குறித்து மத்திய அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணத்திற்கு, முதல்வர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வந்துள்ளது. தொற்றின் தாக்கத்தை புதுச்சேரியில் முழுமையாக நீக்குவதற்கு இந்த நிதி மட்டும் போதாது. அதே சமயத்தில் மத்திய அரசு நிதி வழங்காத காரணத்தாலும், மாநில அரசின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இந்த நிதி வெகுவாக நமக்கு பயன்படும் என்றார்.

தற்போது கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடபட்டுள்ளன. அதே போல் அனைத்து தரப்பு நடவடிக்கைகளும் நின்றுபோய் இருக்கிறது என கூறியுள்ளார். தற்போது அரசுக்கும், மக்களுக்கும் சோதனையான காலகட்டம். மத்திய அரசின் அரிசி மற்றும் பருப்பு சிவப்பு அட்டை தாரர்களுக்கு நாளை மறுதினம் வழங்க உள்ளோம் என்று கூறினார்.


மஞ்சள் அட்டை தாரர்களுக்கும் உதவ வேண்டும் என்று எங்கள் அரசு முடிவெடுத்து அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள முதல்வர்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலம் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி, கலால் வரி,  மின்சாரத்துறை மூலம் கிடைக்க வேண்டிய நிதி, பத்திரப்பதிவு துறை மூலம் கிடைக்க வேண்டிய நிதி அனைத்தும் கிடைக்காத சூழ்நிலையில் நாம் சிரமம்பட்டு, மார்ச் மாதத்துக்கான செலவினங்களை முழுமையாக செய்துள்ளோம்.

அதோடு அரசு ஊழியர்களுக்கு ஊதியம், முதியோர், விதவையர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தியாகிகள் உதவித்தொகை அனைத்தும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு, மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கி அதில் ரூ.11 ஆயிரம் கோடியை பல்வேறு மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளார்.ஆனால் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான நிதியை நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் நமக்கு கிடைக்க வேண்டிய ரூ.995 கோடி நிதிக்கு மத்திய அரசிடம் இருந்து பதிலில்லை என தெரிவித்துள்ள முதல்வர், தற்போது நமக்குள்ள சவால் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதுதான். அதனால் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு இவை இரண்டும் முக்கியமாக  இருக்கிறது. அதை நாங்கள் கவனத்தில் கொண்டு, நாளை மறுநாள் பிரதமர் மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்கிறார்.  அப்போது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும், துன்பம் இல்லாமல் இருக்கும் வகையில் ஒரு முடிவெடுக்க உள்ளதாகவும் மக்களின் உயிர்தான் முக்கியம் எனவும் அவர் கூறினார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading