• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நாடு முழுவதும் புதிதாக 162 ஆக்சிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

நாடு முழுவதும் புதிதாக 162 ஆக்சிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் நாடு முழுவதும், 162 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக, முதலமைச்சர்களே கவலை தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா அரசுக்கு 100 டன் மருத்துவ ஆக்சிஜன், தொழிலதிபர் அம்பானி தரப்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

    இதனிடையே, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும். ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  தொடர்ந்து, ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் இடங்கள், 24 மணி நேரம் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 162 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், ஏற்கனவே 33 உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது சுகாதர மையங்களில் ஆக்சிஜன் கையிருப்பு அளவு, 154 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகரிக்கும் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க... மணப்பாறையில் தனியார் தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழப்பு...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: