கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறந்த சிகிச்சை: ராஜாஜி மருத்துவமனைக்கு மத்திய அரசு பாராட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்ததற்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு, மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறந்த சிகிச்சை: ராஜாஜி மருத்துவமனைக்கு மத்திய அரசு பாராட்டு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்ததற்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு, மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.

இதுவரை 14 பேருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், எந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை எனக் கூறியுள்ள அவர், இதற்காக மத்திய சுகாதாரத்துறையின் சார்பில், லக்சயா திட்டத்தின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா பேரிடர் காலத்தில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், பரிசோதனை மைய ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்கு 3 நேர உணவையும் தொடர்ந்து 75 நாட்களாக தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

6 கட்டங்களாக பள்ளிகளைத் திறக்க முடிவு? வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் என்னென்ன?  
First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading