வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளிக்கக் கோரி  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

நாடு முழுவதும் ஆண்டொன்றுறுக்கு கிராமங்களைச் சேர்ந்த 90 லட்சம் பேர் நகரங்களை நோக்கி பணிக்காக இடம்பெயர்வதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.

வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளிக்கக் கோரி  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!
மாதிரிப்படம்
  • Share this:
வேறு மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவளித்து தங்க இடம் வழங்கும்படி அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாகனங்களில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த ஏராளமான தொழிலாளர்கள் நடைபயணமாக சென்று கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து தங்க வைக்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு கிராமங்களைச் சேர்ந்த 90 லட்சம் பேர் நகரங்களை நோக்கி பணிக்காக இடம்பெயர்வதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.


தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை40ஐ தாண்டியுள்ள நிலையில், இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்களுக்கே தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading