Home /News /coronavirus-latest-news /

காலண்டர், டைரி அச்சுப்பணி நிறுத்தம்: மத்திய அரசுக்கு அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை..

காலண்டர், டைரி அச்சுப்பணி நிறுத்தம்: மத்திய அரசுக்கு அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை..

காலண்டர் அச்சுப்பணி நிறுத்தம்

காலண்டர் அச்சுப்பணி நிறுத்தம்

அரசுத் துறைகள் சார்பாக காலண்டர், டைரி உள்ளிட்டவை அச்சிட்டு கைப்பிரதியாக வழங்குவதை இந்த ஆண்டுடன் நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான சிவகாசியில் 5000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கால் அச்சக தொழில் முடங்கியிருந்த நிலையில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததால் ஏஜெண்டுகள் அனைவரும் ஆர்டர்கள் எடுக்க தயாராகினர்.

    அரசுத் துறைகள் சார்பாக காலண்டர், டைரி உள்ளிட்டவை அச்சிட்டு கைப்பிரதியாக வழங்குவதை இந்த ஆண்டுடன் நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.



    மேலும் படிக்க...பணியில் தவறுசெய்யும் அரசு ஊழியர்கள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை அவசியம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...

    காலண்டர், டைரி அச்சுப்பணி நிறுத்தத்தால்,  பல லட்சம் அச்சக தொழிலாளர்கள் வேலை இழக்க வழி வகுப்பதோடு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வெண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Sivakasi

    அடுத்த செய்தி