சுகாதாரப்பணியாளர், முன்களப்பணியாளர்களை தொடர்ந்து நாளை முதல் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கும், இணைநோய் கொண்ட 45 முதல் 59 வரையுள்ள வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு 250-ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுகாதாரத்துறை விலையை அறிவித்துள்ளது. இதில் தடுப்பூசியின் விலை 150 ரூபாயும் சேவைக் கட்டணம் 100 ரூபாயும் ஆகும். தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் 2.0, ஆரோக்கிய சேது ஆகிய தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இந்த தளங்களில் தடுப்பூசி போடப்படும் தனியார் மருத்துவமனைகளின் விவரம், தடுப்பூசி போடப்படும் நாட்கள், நேரம், மையம் பற்றிய அட்டவணை இருக்கும். தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.