• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நாடு முழுவதும் படிப்படியாக தளர்வு... ஜூன் 8 முதல்கட்டம்

நாடு முழுவதும் படிப்படியாக தளர்வு... ஜூன் 8 முதல்கட்டம்

Youtube Video

சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிற பகுதிகளுக்கு ஜூன் 8 முதல் படிப்படியாக 3 கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜூன் 30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அங்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்.

    கொரோனா கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை தனிமனித இடைவெளியுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் கட்டமாக கல்வி நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து அனைத்து கல்வி நிறுவனங்களயும் திறக்க ஜூலை மாதத்தில் வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    3-ம் கட்ட தளர்வில் சூழலைப் பொருத்து எவை, எவை எந்த தேதியில் திறக்கப்படும் என பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை, தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பெரிய அரங்குகள், மதுக்கூடங்கங்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை தொடரும்.

    சமூகம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம் தொடர்பான பொது நிகழ்ச்சிகளுக்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லை வரையறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்படி முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரவு ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களுக்குள் பிற மாவட்டங்களுக்குச் செல்லவும், மற்ற மாநிலங்களுக்கு செல்லவும் எந்தவித அனுமதியும் இனி பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    65 வயதிற்கு மேல் உள்ளவர்கள், பிற தீவிர நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வெளியில் நடமாட கட்டுப்பாடு தொடருகிறது.

    திருமணத்துக்கு 50 பேர், இறப்புக்கு 20 பேர் என்கிற அதிகபட்ச நபர் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடரும் என்றும்,

    முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அனைத்து சுகாதார கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.










    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: