’ஜாதிப்பெயரை நீக்கமாட்டேன். அது என் வரலாறு, அடையாளம்’ - ஜோ பைடன் குழுவில் இடம்பெற்ற இந்திய மருத்துவர் செலின் கவுண்டர் ட்வீட்..

’ஜாதிப்பெயரை நீக்கமாட்டேன். அது என் வரலாறு, அடையாளம்’ - ஜோ பைடன் குழுவில் இடம்பெற்ற இந்திய மருத்துவர் செலின் கவுண்டர் ட்வீட்..

செலின் கவுண்டர்

தொற்று நோய் சிறப்பு மருத்துவரான செலின், பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் க்ராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 • Share this:
   அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.

  செலின் கவுண்டரின் தந்தை நடராஜ், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.  செலின் கவுண்டர் ட்விட்டர் தளத்தில், எதற்காக இன்னும் ஜாதிப்பெயரைப் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என தமிழர்கள் பலர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்திருக்கும் செலின், “எனது அப்பா 1970களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டார். நடராஜ் என அமெரிக்கர்கள் அழைக்க சிரமப்பட்டதால், கவுண்டர் என்பதை வைத்துக்கொண்டேன். என் பெயரை நீக்கமாட்டேன். அது என் அடையாளம், வரலாறு” என்று பதில் அளித்துள்ளார். இந்தப் பதிலை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் ட்விட்டரில் கருத்திட்டு வருகிறார்கள்.
  நேற்று டாக்டர் செலின் கொரோனா தடுப்பு டாஸ்க் ஃபோர்ஸில் செலின் இடம்பிடித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் அதை இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர். இதுவரை 4 முறை டாக்டர் செலின் மொடக்குறிச்சிக்கு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

  தொற்று நோய் சிறப்பு மருத்துவரான செலின், பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் க்ராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
  Published by:Gunavathy
  First published: