அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.
செலின் கவுண்டரின் தந்தை ராஜ் நடராஜ் கவுண்டர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். 1960-களில், போயிங் கம்பெனியில் பணிபுரிவதற்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நேற்று டாக்டர் செலின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸில் செலின் இடம்பிடித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் அதை இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர். இதுவரை 4 முறை டாக்டர் செலின் மொடக்குறிச்சிக்கு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொற்று நோய் சிறப்பு மருத்துவரான செலின், பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் க்ராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.