கொரோனாவை தடுக்க தவறிவிட்டோம் - அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரி குற்றச்சாட்டு

சீனாவை தவிர்த்து பிற நாடுகளின் விமானங்களுக்கு தடை விதிக்க தாமதித்தது அமெரிக்கா என்று அன்னே சுச்சாட் தெரிவித்தார்.

கொரோனாவை தடுக்க தவறிவிட்டோம் - அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரி குற்றச்சாட்டு
கோப்புப் படம்
  • Share this:
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அமெரிக்கா தவறவிட்டு விட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் மட்டும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு வேறெங்கும் இல்லாத வகையில் 68 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் சுமார் ஆயிரத்து 500 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அமெரிக்கா தவறவிட்டு விட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.  Anne Schuchat என்பவர் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் முதன்மை இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.


சீனாவை தவிர்த்து பிற நாடுகளைச் சேர்ந்த விமானங்களுக்கும், பயணிகளுக்கும் தடை விதிக்க அமெரிக்கா தாமதித்ததாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு விமானங்களுக்கு தடை விதிப்பதற்கு முன்பே, கொரோனா பெரும்பாலும் பரவி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்கூட்டியே ஐரோப்பிய விமானங்களுக்கு தடை விதித்திருந்தால், இத்தனை பாதிப்பு இல்லாமல் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வீடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  அதில் அமெரிக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, மனிதாபிமானத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றும், அதன்மூலமே பெருந்தொற்றை வெல்ல முடியும் என்றும் புஷ் அழைப்பு விடுத்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின், சீனாவுக்கு எதிரான கருத்துகளை கேலி செய்து அனிமேசன் வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது. அதில் முகக்கவசங்களுடன் நிற்கும் மருத்துவத்துறையினர் கொரோனாவின் தாக்கம் குறித்து விளக்க, அதற்கு மறுபுறம் உள்ள சுதந்திர தேவி சிலை அலட்சியமாக மறுப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. இறுதியில் சுதந்திர தேவி சிலைக்கே காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது போல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சீனாவில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

Also see...











Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading