• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஆன்லைன் வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறது சிபிஐ

ஆன்லைன் வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறது சிபிஐ

sanitisers

sanitisers

கொரோனா குறித்த தகவல்களின் பெயரில் வரும் ஆன்லைன் வைரஸ் இணைப்புகள், மெத்தனால் கலந்த  சானிட்டைசர்கள் விற்பனை ஆகியவை அதிகரித்து வரும் குற்றங்களாக இருப்பதாக இண்டர்போலின் தகவல்கள் தெரிவிப்பதாக மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் எச்சரித்துள்ளது சிபிஐ.

  • Share this:
    கொரோனா குறித்த தகவல்களின் பெயரில் வரும் ஆன்லைன் வைரஸ் இணைப்புகள், மெத்தனால் கலந்த  சானிட்டைசர்கள் விற்பனை ஆகியவை அதிகரித்து வரும் குற்றங்களாக இருப்பதாக இண்டர்போலின் தகவல்கள் தெரிவிப்பதாக மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் எச்சரித்துள்ளது சிபிஐ.

    Personal protective gear equipment என்னும் கவச உடையான PPE-ஐ விற்பனை செய்வதாக போலியான மாதிரிகளுடன், மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் மோசடி பேர்வழிகள் அணுகுவதாக இண்டர்போல் தகவல் அளித்துள்ளது. மேலும் உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மெத்தனால் கலந்த போலி சானிடைசர்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வருவதாக இண்டர்போல் தகவல் அளித்திருப்பதாக சிபிஐ, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை எச்சரித்துள்ளது.

    கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான தகவல்களை தீங்கிழைக்கும் மென்பொருள் வலைதளங்கள் பயன்படுத்துவதாக கடந்த மாதம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை அனுப்பியிருந்தது சிபிஐ. கோவிட் -19 தொடர்பான மோசடி வேலைகளில் ஈடுபடுவதற்காக இணைப்புகளை பதிவிறக்குவதற்கு ஸ்மார்ட்போன் பயனர்களை ஈர்க்கும் banking trojan பற்றிய எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: