ஹோம் /நியூஸ் /கொரோனா /

பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்து இடைவிடாமல் இயங்கி வந்த மாட்டுச்சந்தை: முதல்முறையாக மூடப்பட்டது!

பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்து இடைவிடாமல் இயங்கி வந்த மாட்டுச்சந்தை: முதல்முறையாக மூடப்பட்டது!

வெறிச்சோடி காணப்படும் மாட்டுச் சந்தை.

வெறிச்சோடி காணப்படும் மாட்டுச் சந்தை.

"மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் இந்தச் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது"

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்து இடைவிடாமல் இயங்கி வந்த மாட்டுச்சந்தை முதல் முறையாக கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரி- விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு கிராமத்தில் மாட்டுச்சந்தை இயங்கிவருகிறது. இந்தச் சந்தையை மறு அறிவிப்பு வரும் வரை சந்தையை திறக்கக்கூடாது என கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்தச் சந்தைக்கு புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கோயமுத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கொண்டு வந்து விற்பது வழக்கம். மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் இந்தச் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்து இயங்கி வரும் இந்தச் சந்தை முதல்முறையாக இப்போதுதான் மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Cow Market, Puducherry