கொரோனா நிவாரண நிதி விவரங்களை இணையத்தில் வெளியிடக் கோரி வழக்கு - பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது என்பதை தெரியபடுத்த என்ன சிரமம் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்கேள்வி எழுப்பியுள்ளது

கொரோனா நிவாரண நிதி விவரங்களை இணையத்தில் வெளியிடக் கோரி வழக்கு - பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மாதிரிப் படம்.
  • Share this:
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.

அந்த அடிப்படையில் திரட்டப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் எதுவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் நிதி வழங்கியவர்கள் யார் யார், பயனாளிகள் யார் யார் என்பன போன்ற எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.


Also read: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர், மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் தான் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிரமம் உள்ளது என்று கேள்வியை முன்வைத்தனர். மேலும், இது குறித்து உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading