• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவுக்கு சித்த மருத்துவர் கண்டறிந்த மருந்து - காப்புரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனாவுக்கு சித்த மருத்துவர் கண்டறிந்த மருந்து - காப்புரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த மருந்துக்கு காப்புரிமை வழங்குவது குறித்து முடிவு செய்ய, வரும் 26ம் தேதிக்குள் வல்லுநர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    கொரோனாவுக்கு சித்த மருத்துவ வழிமுறைகள் படி மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அதற்கு காப்புரிமை வழங்க வேண்டும் எனவும் மதுரையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உய ர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சித்த மருத்துவர் சுப்பிரமணி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவ முறைப்படி 66 மூலிகைகளை கொண்டு மூலிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தி கொரானா தொற்றை குணப்படுத்தும் என்று சான்று வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் தெரிவித்தார்.

    Also see:



    பின்னர், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படியே கொரோனா சிகிச்சைக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணி வரும் 26ம் தேதி சென்னையில் உள்ள இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவ இயக்குநரிடம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: