அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது - உயர் நீதிமன்றத்தில் மனு

சில இடங்களில் காவல்துறை தாக்கும்போது மக்களும் திருப்பி தாக்குவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது - உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
அத்தியாவசிய பொருட்கள் வாங்க சாலைகளுக்கு வருபவர்களை காவல்துறையினர் துன்புறுத்த கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. பால், மருந்து, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கவும், விநியோகிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க சாலையில் செல்பவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது அவசியமில்லாமல் தடியடி நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சில இடங்களில் காவல்துறை தாக்கும்போது மக்களும் திருப்பி தாக்குவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading