குழந்தைகள் ஆபாச வீடியோ: ட்விட்டர் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்நிலையில், தனது வலைதள பக்கத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த தவறியதாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் மீது டெல்லி போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கைகள், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது போன்றவையால் ட்விட்டர் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்தியாவின் வரைப்படத்தை திரித்து வெளியிட்டதாகவும் காஷ்மீர், லடாக் ஆகியவற்றை தனி நாடாக  குறிப்பிட்டும் ட்விட்டர் வரைபடம் வெளியிட்டது.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்தியாவின் வரைபடத்தை தவறாக காட்டியதாக ட்விட்டரின் இந்திய நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி மீது உத்தரபிரதேசம் மற்றும்  மத்திய பிரதேசத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டர் வலைதளத்தில் குழந்தை ஆபாச வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் டெல்லி சைபர் கிரைமில் புகார் அளித்தது.  இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்தின்  தலைவர் பிரியங்க் கனூங்கோ ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "தவறான தகவல்களை வழங்கியதற்கும், போக்ஸோ சட்டத்தை மீறியதற்கும் ட்விட்டருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.  குழந்தைகளுக்கு ட்விட்டர் பாதுகாப்பானது அல்ல என்பதால்  அவர்கள்  ட்விட்டரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது  என்று நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம்  எழுதியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

 
Published by:Murugesh M
First published: