கொரோனா பெயரை மாற்றினால் ரூ.100 கோடி தரத் தயார்! பீயர் நிறுவனத்தின் அறிவிப்புக்கு என்ன காரணம்

கொரோனா பெயரை மாற்றினால் ரூ.100 கோடி தரத் தயார்! பீயர் நிறுவனத்தின் அறிவிப்புக்கு என்ன காரணம்
கொரோனா வைரஸ் தொற்றம்
  • Share this:
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வைரசின் பெயரை மாற்ற 100 கோடி ரூபாய் தரத் தயார் என அறிவித்திருக்கிறது பீயர் நிறுவனம்.

கொரோனா என்ற பெயர் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், மெக்சிகோ நாட்டு தயாரிப்பான கொரோனா பியர் நிறுவனம் தான் தங்கள் தயாரிப்புக்கு வைரசால் ஏற்பட்ட அவப்பெயரை துடைத்தெறிய வரிந்துகட்டி நிற்கிறது.

கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது இது பியர் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரச்னை ஆகிவிட்டது. கொரோனா என்ற பெயரை இணையத்தில் தேடினால் கொரோனா பியரும் வரிசையில் நிற்கிறது. உடனே கொரோனா பியர் வைரஸ் என்றும் வைரஸ் பியர் என்றும், வைரசுடன் இந்த பியரை தொடர்புபடுத்தி இணையத்தில் விஷமிகள் சிலர் பற்ற வைத்தனர்.


கொரோனா பீர்


கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் கொரோனா பியர் வைரஸ் என இணையத்தில் தேடுவோரின் எண்ணிக்கை பல கோடியாக அதிகரித்துள்ளது. கூகுள் தேடுதளத்தில் கொரோனா என டைப் செய்யும் போதே பரிந்துரைப் பட்டியலில் கொரோனா பியரின் பெயரும் சேர்ந்தே வரிசை கட்டியது.

இதற்கெல்லாம் உச்சமாக நியூசிலாந்தைச் சேர்ந்த மதுபான விடுதி, வெயில் நேரத்தில் கொஞ்சம் கொரோனா குடியுங்கள் என சர்ச்சையான விளம்பரத்தைக் கொடுத்தது. இதனால் அதிர்ந்து போன கொரோனா நிறுவனம் மேற்படி வைரசுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என நீண்ட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது.தங்களின் வாடிக்கையாளர்களான குடிமக்கள் இந்த வித்யாசத்தை உணர்ந்து கொள்வார்கள் என நம்பினாலும் பெயர் ஏற்படுத்திய களங்கத்தை துடைக்கும் விதமாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கொரோனா நிறுவனம்.

ஆட்கொல்லி வைரசுக்கு கொரோனா என்ற பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாயை தரத் தயார் என அறிவித்துள்ளது. இதுமட்டுமல்ல தங்களின் போட்டி நிறுவனங்கள் தயாரிக்கும் பட்லைட்(budlight) பியர் மற்றும் ஹெய்னெக்கென் பியர் பெயர்களை இந்த வைரசுக்கு சூட்டினால், கூடுதலாக 30 கோடி ரூபாய் அதாவது மொத்தமாக 100 கோடி ரூபாயை தருவோம் என நூதன விளம்பரமும் செய்திருக்கிறது கரோனா பியர் நிறுவனம்..

பியரில் இருக்கும் ஆல்கஹாலும் உடலுக்கு கெடுதல்தான் என்றாலும் கொரோனா அளவுக்கு நாங்கள் இல்லை என கூறுகிறது பியர் தயாரிப்பு நிறுவனம்.

Also see:

First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading