Home /News /coronavirus-latest-news /

தாடி வைத்திருப்பவரா நீங்கள்? - முகக்கவசங்கள் அணியும்போது கவனிக்க வேண்டியவை இதோ..

தாடி வைத்திருப்பவரா நீங்கள்? - முகக்கவசங்கள் அணியும்போது கவனிக்க வேண்டியவை இதோ..

கோப்புப்படம்

கோப்புப்படம்

தாடி வைத்திருப்பவர்கள் முகக்கவசம் அணியும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை டெர்மபியூரிட்டீஸ் துணைத் தலைவர் லலிதா ஆர்யா பகிர்ந்துள்ளார்.

    உலகம் முழுவதும் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய மாற்றங்களைக் கோவிட்-19  கொண்டு வந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்தப் பட்டியலில், அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டிருப்பதை முதலிடத்தில் வைக்க முடியும். கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசங்கள் அணியுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

    மூடிக்கவசங்கள் அணிவது தோல் எரிச்சல், சிவப்பு தடிப்புகள் மற்றும் சென்சிடிவ் சருமம் இருப்பவர்களுக்கு தழும்புகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக தாடி இருக்கும் ஆண்களுக்கு முகக்கவசங்கள் அணிவதால் தோல் பிரச்னைகள் அதிகம் உண்டாகிறது. முகக்கவசம் அணிவதால் முகத்தின் அடியிலுள்ள முடியின் ஒரு அடுக்கு மிகவும் குழப்பமாகி எரிச்சல் போன்ற தோல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

    தாடி இருப்பவர்கள் முகக்கவசங்களை சரியாக அணிய முடியாது. இதன் காரணமாக வைரஸ் கிருமிகள் உங்கள் மூக்கு, வாய்க்குச் செல்ல போதுமான இடைவெளி இருக்கும். எனவே உங்கள் உடலில் வைரஸ்கள் நுழைவதைத் தவிர்க்க தாடி முடியின் நீளத்தை உங்களால் முடிந்தவரை சிறியதாக வைத்திருங்கள். அவ்வப்போது ட்ரிம் செய்துகொள்வது நல்லது.

    தாடி வைத்திருப்பவர்கள் முகக்கவசம் அணியும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை டெர்மபியூரிட்டீஸ் துணைத் தலைவர் லலிதா ஆர்யா பகிர்ந்துள்ளார்.

    1. முகக்கவசம் காரணமாக ஏற்படும் ஈரப்பதம் சருமத்தில் அரிப்பு மற்றும் தாடியில் பொடுகு போன்ற பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு அடர்த்தியான அல்லது நீண்ட தாடி இருந்தால் தாடியை சரியாக உலர வைக்கவும்.

    2. அசுத்தமான முககவசங்கள் முகப்பரு மற்றும் தோல் தடுப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உங்கள் முகமூடியை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    4. முகக் கவசம் அணிவதற்கு முன் உங்கள் தாடியை சுத்தம் செய்து நல்ல எஸ்பிஎஃப் லோஷனை பயன்படுத்த மறக்காதீர்கள்.

    5. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் முககவசத்தை அணிவதற்கு முன்னர் தாடியில் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்கவும்.

    6. உங்கள் தாடியில் கையை வைத்து தடவும் பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. ஏனெனில் உங்கள் கைகளில் இருக்கும் கிருமிகள் உங்கள் தாடி வழியாக வாய்க்குச் செல்ல நேரிடும். எனவே சீப்பைக் கொண்டு மட்டும் அவ்வப்போது தாடியை சீவி விடுங்கள்.

    Also read: முகக்கவசங்கள் அணிவதால் மூச்சுத்திணறல் ஏற்படுமா? - ஆய்வு முடிவுகள் கூறுவதென்ன?



    7. பருத்தியால் ஆன முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம். தற்போது இரண்டு லேயர்களில் உருவாகும் பருத்தி முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள். இது உங்கள் தாடி இறுக்கம் ஆவதைத் தவிர்த்து எரிச்சல் உண்டாகாமல் பாதுகாக்கும்.

    8. முகக்கவசம் அணிவதால் உருவாகும் வறட்சியைத் தவிர்க்க உங்கள் தாடியை ஈரப்பதமாக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஷேவ் செய்ய முடிவு செய்தால், உங்கள் சருமத்திற்குக் கூடுதல் கவனம் தேவை. முகக்கவசம் அணிவதற்கு முன்பு உங்கள் முகத்தை சுத்தப்படுத்தி ஈரப்பதமாக்குங்கள். அதை அகற்றிய பின் உலரவிடுங்கள்.

    9. உங்களுக்கு ஏற்கனவே தோல் ஒவ்வாமை அல்லது நோய்த்தொற்றுகள் இருந்தால் உங்கள் தாடியை ஈரப்பதமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க கிருமி நாசினி கொண்ட மாய்சரைசரை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை முகக்கவசம் அணியும் முன்னர் அதனை சுத்தப்படுத்த மறக்க வேண்டாம்.

    தற்போது உள்ள தொற்றுநோய் பரவல் காரணாமாக முகக்கவசம் அணிவது இயல்பான ஒன்றாக மாறி விட்டது. முகக்கவசங்கள் அணியாமல் நம் வீடுகளை விட்டு வெளியேற முடியாது. இதனால் தாடி வைத்தவர்கள் தம் அதை சரியாக பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பாகிவிட்டது. எனவே, உங்கள் தாடியை ஷேவிங் செய்வது இப்போதே உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த வழி என்றும் லலிதா ஆர்யா அறிவுறுத்தியுள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Mask

    அடுத்த செய்தி