கொரோனா செய்திகளை ஒளிபரப்பத் தடை கோரும் மனு: ‘விளம்பரம்’ என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

டெல்லி உயர்நீதிமன்றம்

செய்திகள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஊடகங்களுக்கு கொரோனா செய்திகளை வெளியிடக்கூடாது என்று தடையெல்லாம் விதிக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

 • Share this:
  நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் நெருக்கடி தொடர்பான செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப "கட்டுப்பாடுகள்" கோரி ஒரு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தபோது, அவர்கள் வெளியிடும் தகவல்கள் சரியாக இருக்கும் வரை ஊடகங்களுக்கு எந்தவிதமான தடைகளும் விதிக்க முடியாது என்று கூறினார்.

  கொரோனா தொற்று இரண்டாவது அலையில் செய்தி சேனல்கள் "மிகவும் எதிர்மறையான" காட்சிகள் மற்றும் செய்திகளி ஒளிபரப்புகின்றன். இது மக்களிடையே "வாழ்க்கையை பாதுகாப்பற்ற உணர்வை" ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளி ஒளிபரப்ப விதிக்க கோரி டெல்லி ஐக்கோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

  இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி ஜாஸ்மீத் சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டது.செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனாசெய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

  கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

  நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் இடமில்லை என்று சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது. அடையாள அட்டை இல்லை என்று கூறி அத்தியாவசிய மருந்துகளையும் மறுக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

  இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று இரவு நீதிபதிகள் அமர்வு பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பிறப்பித்தது.

  அதில், “கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையின் இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் தங்களின் பாதிப்புகளையும், உதவி கோரியும் சமூக ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முடக்கக் கூடாது. சமூக வலைதளங்கள் மூலம் உதவி கோரும் தனிநபர்களுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக எடுக்கப்படும்.

  கரோனாவில் பாதிக்கப்பட்ட எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் இடமில்லை என்றும், அத்தியாவசிய மருந்து கோரும்போது அடையாள அட்டை ஏதுமில்லை என்று மறுப்பதும் கூடாது” என்று கூறியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: