தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க - குடும்பத்துக்கு ₹5000 வழங்குக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்யுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தேசிய சராசரியை விட இரட்டிப்பாகிவிட்டதாகவும், 2019 டிசம்பருக்குப் பின் வேலை வாய்ப்பின்மை 10 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

  எவ்வித ஒழுங்குமுறையும் இல்லாமல் ஊரடங்கு, இ-பாஸ் நடைமுறையைத் தொடர்வதால் கொரோனா பேரிடர் காலம் 'வேலை இழப்பின்' உச்சக்கட்ட காலமாக மாறி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

  புதுச்சேரி அரசு போல் உடனடியாக இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5000 ரூபாய் நிதி அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

  Also read: சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி.. கூடுதல் விமானங்களை இயக்க விரைவு இணைப்பு பாதை

  உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா மற்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


  வெற்று அறிவிப்புகள், வீண் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் முதலமைச்சர் பழனிசாமி படுபாதாளத்தில் வீழ்த்தி இருப்பதாகவும், அவர் சாடியுள்ளார்.
  Published by:Rizwan
  First published: