கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி விமானத்தை திருப்பிய இளைஞர்... குறும்புக்காக செய்ததாக வாக்குமூலம்!

கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி விமானத்தை திருப்பிய இளைஞர்... குறும்புக்காக செய்ததாக வாக்குமூலம்!
ஜேம்ஸ்
  • News18
  • Last Updated: February 7, 2020, 4:06 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி விமானத்தை திருப்பிய இளைஞர் குறும்புக்காக செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜேம்ஸ் என்ற 28 வயது இளைஞர் சமீபத்தில் டிரோண்டாவில் இருந்து ஜமைக்கா சென்று கொண்டிருந்த விமானத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பாதாக கூற விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசோதனையில் இளைஞர் குறுப்புக்காக வைரஸ் இருப்பது கூறியது அம்பலமானது.

சமீபத்தில் வெஸ்ட் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று டொராண்டோ நகரில் இருந்து ஜமைக்காவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஜேம்ஸ் என்ற இளைஞர் தனது இருக்கையிலிருந்து எழுந்து, “தான் சமீபத்தில் தான் சீனாவின் ஊஹான் நகரத்திலிருந்து திரும்பியதாகவும், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும்” சத்தம் போட, விமானத்தில் இருந்த சக பயணிகளிடம் பீதி பரவியது.


உடனடியாக அவர் விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினரால் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமானத்திலிருந்த மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின் விமான நிலையத்தில் தயாராக இருந்த பிரத்யேக மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் சென்று வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அந்த இளைஞரை பரிசோதித்தனர். பரிசோதனை மற்றும் விசாரணையின் முடிவில் அந்த இளைஞர்,”தனக்கு எந்த வைரஸ் பாதிப்பும் இல்லையென்பதை ஒப்புக்கொண்டார்”.இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஜேம்ஸ், தற்போது 5 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் அப்போது கையில் ஒரு வீடியோ கேமிரா இருந்ததாகவும், அதில் இதையெல்லாம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையிலேயே தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக” கூறி மன்னிப்பு கோரியுள்ளார் அவர்.இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபத்தையும், அதிருப்தியையும் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும் படி ஜேம்ஸ்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

Also see...
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading