குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தை கொரோனா சிகிச்சை மையமாக்குவதற்கு எதிராக வழக்கு

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைக்கு மாறாக குடியிருப்புகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தை கொரோனா சிகிச்சை மையமாக்குவதற்கு எதிராக வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க முடிவெடுத்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வீடு இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் எழும்பூர் கேசவப்பிள்ளை பார்க் பகுதியில் கடந்த 1970ம் ஆண்டு குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டடம் பழுதானதால் 2018ம் ஆண்டு இடிக்கப்பட்டது. தற்போது புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியருப்பைப் பயனாளிகளுக்கு வழங்காமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்ற அரசு முயற்சிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.


கொரோனா நோயாளிகளிக்கு போதுமான மருத்துவமனைகள் மற்றும் படுக்கை வசதிகள் உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் விதிமுறைக்கு மாறாக குடியிருப்புகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடியிருப்புகளை சிகிச்சை மையமாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், வீடுகள் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க குடிசை மாற்று வாரியத்திக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு, கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்காக ஏற்கனவே வீடுகள் ஒதுக்க பிறப்பிக்கப்பட்ட அரசின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும், இந்த மனு தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading