• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • குணமடைந்தவர்களிடமிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவுமா..?

குணமடைந்தவர்களிடமிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவுமா..?

ஒரே நேரத்தில் இரு வைரஸ்களிலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் வசிக்கும் இடத்தில் எந்தெந்த வைரஸ்கள் பரவுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன என்று ப்ரிகாம் மகளிர் மருத்துவமனை மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர். டேனியல் சாலமன் கூறினார்.

ஒரே நேரத்தில் இரு வைரஸ்களிலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் வசிக்கும் இடத்தில் எந்தெந்த வைரஸ்கள் பரவுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன என்று ப்ரிகாம் மகளிர் மருத்துவமனை மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர். டேனியல் சாலமன் கூறினார்.

கூடுதலாக 2 வாரங்கள் தனிமையில் இருப்பது அவசியம்.

  • Share this:
    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஆரம்ப அறிகுறிகளிலேயே குணமடைந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவலாம் என புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.

    எனவே பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பினாலும் அல்லது வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகள் பெற்றவர்களாக இருந்தாலும் மேலும் 2 வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

    American Journal of Respiratory and Critical Care Medicine வெளியிட்டுள்ள இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் இனைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.



    வைரஸ் அறிகுறிகளிலிருந்து மீண்டவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்துள்ளனர். அதில் பாதி பேருக்கு குணமடைந்த பிறகும் அதன் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அதாவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டு ஐந்து அல்லது எட்டு நாட்களுக்குள் குணமாகிவிட்டாலும் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவலாம். எனவே கூடுதலாக 2 வாரங்கள் தனிமையில் இருப்பது அவசியம். அதேபோல் நீங்கள் வைரஸை மற்றவர்களுக்கும் பரப்பவில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். என மருத்துவர் லோக்கேஷ் ஷர்மா கூறியுள்ளார். இவர் யாலே மருத்துவப் பள்ளியில் பணியாற்றுகிறார்.






    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: