இனி மாணவர்கள் தாங்களாகவே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.. பல்கலைக்கழகத்தின் புது முயற்சி..

இனி மாணவர்கள் தாங்களாகவே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.. பல்கலைக்கழகத்தின் புது முயற்சி..

கொரோனா பரிசோதனை

அமெரிக்காவிலேயே முதன்முறையாக மாணவர்களே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வசதியை கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, மக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கியது. டிரம்ப் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவிலேயே முதன்முறையாக, மாணவர்களே கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும் வசதியை சாண்டியாகோ நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மெஷின்களில் , ID card -ஐ கொண்டு மாணவர்களே தங்களின் கொரோனா பரிசோதனை மாதிரிகளை கொடுக்கலாம். அதனை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மையத்தில் உள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அதிகபட்சமாக 24 மணி நேரத்துக்குள் முடிவுகளை கொடுக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதால், அனைவரும் வாரம் ஒருமுறையாவது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது என கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக வளாகத்திலேயே இலவச கொரோனா பரிசோதனை மெஷின்களை நிறுவியுள்ளதாகவும், நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், கொரோனா மாதிரிகளில் Positive வந்தால் அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்டால், மாணவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களில் 600க்கும் குறைவான மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

வளாகம் முழுவதும் 12 இடங்களில ஆட்டோமேடிக் கொரோனா பரிசோதனை மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய கலிஃபோர்னியா பல்கலைக்கழக துணைவேந்தர் பிரதீப் கோசாலா , "ஆட்டோமேடிக் மெஷின்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டது, உண்மையிலேயே மிகச்சிறந்த பயனைக் கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை செய்கிறோம். இதற்கு முன்னர் 2 வாரங்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது. தற்போது, அதனை வாரம் ஒருமுறை என மாற்றியிருக்கிறோம். கொரோனா வேகமாக பரவுவதால் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எங்களின் கடமையாகும்.

இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. மாணவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது", என்றார். பி.சி.ஆர் கருவிகளைக் கொண்டு மிகவும் கவனமுடன் கொரோனா பரிசோதனை செய்து வருவதாக பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவிலேயே முதன்முறையாக, கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மட்டுமே வளாகத்திலேயே ஆட்டோமேடிக் கொரோனா பரிசோதனை மெஷின்களை அமைத்து மாணவர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனையை செய்து கொடுக்கிறது. இருப்பினும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் மட்டுமே கலிஃபோர்னியா பல்கலைக்கழக்கம் வழங்குகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published: