• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புதுச்சேரி- காரைக்கால் பேருந்து போக்குவரத்து இன்று முதல் துவக்கம்..!

புதுச்சேரி- காரைக்கால் பேருந்து போக்குவரத்து இன்று முதல் துவக்கம்..!

புதுச்சேரி- காரைக்கால் பேருந்து போக்குவரத்து இன்று முதல் துவக்கம்

புதுச்சேரி- காரைக்கால் பேருந்து போக்குவரத்து இன்று முதல் துவக்கம்

தமிழகத்தின் இரு மாவட்ட எல்லைகளை தாண்டும் போது பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என இரு மாவட்ட ஆட்சியர்களும் நிபந்தனையுடன் அனுமதித்தனர்.

  • Share this:
கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்ட சூழ்நிலையில் நேற்று முதல் புதுச்சேரியில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பலரும் பணி காரணமாக செல்ல இருப்பதினால் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை 6 மணிக்கு காரைக்காலுக்கு அரசு  பேருந்து ஒன்று  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் வரவேற்பு அதிகமாக இருந்ததால் 3 பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதன் படி முதல் பேருந்து 32 பயணிகளுடன் காலை 6 மணிக்கு புறப்பட்டது. புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் கடலூர் மற்றும் நாகை ஆகிய இரு மாவட்டங்களை தாண்டி காரைக்காலுக்கு செல்ல வேண்டி இருப்பதால் இரு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.  முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் 32 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் இரு மாவட்ட எல்லைகளை தாண்டும் போது பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என இரு மாவட்ட ஆட்சியர்களும் நிபந்தனையுடன் அனுமதித்தனர். மேலும் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பேருந்துகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துவக்கி வைத்தனர். படிப்படியாக மேலும் பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க அரசு   திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: