கொரோனாவைக் கட்டுப்படுத்த இணைந்து செயல்பட முடிவு: மோடி, பிரிட்டன் பிரதமர் தொலைபேசியில் ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கையை போரிஸ் ஜான்சான் பாராட்டியுள்ளார்

 • Share this:
  கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து அவர்கள் பேசியதாக பிரிட்டன் அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  உலக வெப்பமயமாதலின் எதிரொலியாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கையை போரிஸ் ஜான்சான் பாராட்டியுள்ளார். மேலும், வணிகம், கலாச்சார உறவு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும் மோடியும், போரிஸ் ஜான்சனும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: