Home » News » Coronavirus-latest-news » BRITAIN CORONA VIRUS STRAIN HIKE VJR

பிரிட்டனில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா... சடலங்களை புதைக்க இடமின்றி தவிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் 19 நாட்களில் 50.000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

பிரிட்டனில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா... சடலங்களை புதைக்க இடமின்றி தவிக்கும் அமெரிக்கா
மாதிரி படம்
  • Share this:
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சடலங்களை புதைக்க இடமின்றி கல்லறைகள் நிரம்பி வழிகின்றன.

கொரோனாவின் கோரப்பசிக்கு உலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை விதைத்திருக்கிறது.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனில் பல்வேறு பகுதிகளில், நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 6 நாட்களாக நோய் தொற்றால் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்டுகின்றனர்.


பிரிட்டனில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளால் எந்த பயனும் இல்லை எனவும், நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை கைமீறி சென்றுவிட்டதாகவும், உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். பள்ளிகளை மூடுவது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இதற்கிடையே, இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். குறிப்பாக 19 நாட்களில் 50.000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள கல்லறைகளில் சடலங்களை புதைக்க இடம் இல்லாததால் பல நாட்கள் சடலங்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 4, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading