திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சானிடைசர் கொடுத்து வரவேற்ற மணமக்கள்!

திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு  உணவு விருந்து, காபி, குடிநீர் எதுவும் வழங்கப்படவில்லை. விழா முடிந்த 10 நிமிடங்களில் அனைவரும் கலைந்து சென்றனர்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சானிடைசர் கொடுத்து வரவேற்ற மணமக்கள்!
கொரோனா புதுச்சேரி திருமணம்
  • Share this:
புதுச்சேரியில் கொரோனாவால் எளிய முறையில் நடந்த திருமணம். இந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சந்தனம்- பூ கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் கொடுத்து வரவேற்கப்பட்டது. 

புதுச்சேரி ஜீவா நகரை சேர்ந்த கணேஷூக்கும் சோலை நகரை சேர்ந்த ரஞ்சனிக்கும் இன்று கடலூர் திருவந்திபுரம் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரியில் எளிய முறையில் வாழைக்குளம்  செங்கழுநீரம்மன் கோயிலில் இன்று குறிப்பிட்ட  முகூர்த்த நேரத்தில் திருமணம் நடந்தது.

விழாவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம்- பூ கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் கொடுத்து வரவேற்கப்பட்டது. மணமகன்,மணமகள், புரோகிதர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர்.


வழக்கமாக திருமணத்திற்கு வருபவர்கள் போட்டோ-வீடியோவில் அழகாக பதிய வேண்டும் பூ-பட்டு புடவைகளுடன் அலங்காரத்துடன் காணப்படுவார்கள். ஆனால் கொரோனா காரணமாக மிக எளிமையுடன் முக கவசம் அணிந்திருந்தனர்.

இந்த திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு  உணவு விருந்து, காபி, குடிநீர் எதுவும் வழங்கப்படவில்லை. விழா முடிந்த 10 நிமிடங்களில் அனைவரும் கலைந்து சென்றனர். இவர்களுக்கு தாம்பூலம் கூட வழங்கப்படவில்லை. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை  புதுச்சேரி சாய்பாபா மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான முன்தொகை திரும்ப அளிக்கப்பட்டு அங்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்