• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • திருமண வரவேற்பில் மயங்கிய மணமகனுக்கு கொரோனா...70 குடும்பத்தினர் பங்கேற்றதால் கிராமத்திற்கு சீல்

திருமண வரவேற்பில் மயங்கிய மணமகனுக்கு கொரோனா...70 குடும்பத்தினர் பங்கேற்றதால் கிராமத்திற்கு சீல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    ஆந்திராவில் திருமண வரவேற்பின்போது மயங்கிவிழுந்த மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது.

    ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய இளைஞர் ஒருவர், தனது திருமணத்திற்காக, கர்னூல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான மர்ரிமானு தாண்டாவிற்கு சென்றார்.

    எல்லையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கல்யாணம் முடிந்தது. திருமண வரவேற்பில் 70 குடும்பத்தினர் பங்கேற்ற நிலையில், மணமகனுக்கு தொற்று உறுதியானதால் அந்த கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மணமகள் கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: