தர்பூசணி கடைக்காரரிடம் பணம் கேட்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் - வேலூரில் 3 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட்

குற்றச்சாட்டுகள் வந்ததன் அடிப்படையில் அவர்களை பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி காமினி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தர்பூசணி கடைக்காரரிடம் பணம் கேட்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் - வேலூரில் 3 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட்
கோப்புப் படம்
  • Share this:
வேலூரில் போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர், பெண் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

வேலூர் சத்துவாச்சாரி சிறப்பு உதவி ஆய்வாளர் சுகுமார், பெண் தலைமை காவலர் மணிமேகலை ஆகியோர் தர்பூசணி கடைக்காரரிடம் பணம் கேட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

வேலூர் தாலுகா உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் இவர் 144 தடை உத்தரவின்போது பிடிபடும் இருசக்கர வாகனங்களை தனியாக ஒரு இடத்தில் பார்க்கிங் செய்து ஒரு வாகனத்திற்கு 2000 முதல் 8000 வரை வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Also read: ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அன்னதான திட்டம் - நாடு முழுக்க 2 கோடி பேர் தினமும் பயன்பெறுகின்றனர்

வேலூர் வடக்கு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் 3000 முதல் 10,000 வரை லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பனமடங்கி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, பாகாயம் காவல் நிலையம் எழுத்தர் பாலமுருகன் என்பவர் அதிரடியாக மேல்பாடி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி காமினி நடவடிக்கை எடுத்திருக்கிறார். மேலும், இதுபோன்ற செயல்களில் காவலர்கள் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also see:
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading