• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பிரேசிலில் மருத்துவமனையாக மாறும் புகழ்பெற்ற மரக்கானா மைதானம்...!

பிரேசிலில் மருத்துவமனையாக மாறும் புகழ்பெற்ற மரக்கானா மைதானம்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா விளையாட்டரங்கம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.

    1950 ஆம் ஆண்டு இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்ட போது உலகிலேயே அதிக பார்வையாளர் கொள்ளளவு கொண்ட அரங்கமாக இருந்தது. பிரேசிலில் கொரோனாவால் 327 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சா பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    Also read... கொரோனா விளைவு: அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 2 கோடியாக உயரும்.. பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு..!

    இதையடுத்து ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள மரக்கானா விளையாட்டரங்கம் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது. 1800 படுக்கைகளுடன் உருவாகி வரும் இந்த மருத்துவமனை ஏப்ரல் மாத இறுதிக்குள் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: