• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது பிரேசில்- கடும் முறைகேடுகள் புகாரினால் திடீர் முடிவு

கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது பிரேசில்- கடும் முறைகேடுகள் புகாரினால் திடீர் முடிவு

கோவேக்சின்

கோவேக்சின்

இந்திய நிறுவனமான பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் கோரோனா தடுப்பூசிகளை வாங்கும் ஒப்பந்தத்தை பிரேசில் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    20 மில்லியன் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கான அந்த ஒப்பந்தம் அங்கு பெரிய ஊழல் புகார்களையும், அதிபர் போல்சனாரோவுக்கு பெரிய தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஊழலை அம்பலப்படுத்தும் செயல்பாட்டாளர்கள் கோவாக்சின் கொள்முதலில் ஊழல் இருப்பதாக புகார்களை எழுப்ப அங்கு மக்களிடையே போல்சனாரோ மீதான கடும் அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில் 324 மில்லியன் டாலர்களுக்கான கோவாக்சின் இறக்குமதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

    Also Read: India-China Trade | ‘சீனாவைப் புறக்கணிப்போம்’ கோஷம் பொய்த்தது : 2021-ல் இந்தியாவின் பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனாதான் - அமெரிக்கா அல்ல

    “முதற்கட்ட ஆய்வுகளின் படி இந்த கோவாக்சின் ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் எதுவும் இருப்பதாக, முறைகேடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு இணங்க ஒப்பந்தத்தை ரத்து செய்யவிருக்கிறோம். இது தொடர்பாக மேலும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரேசில் அரசு வழக்கறிஞர்கள் தரப்பில் ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணையைக் கையில் எடுத்துள்ளனர். அதாவது அதிக விலை கொடுத்து வாங்குவதாக புகார்கள் எழுந்தன. மேலும் கோவாக்சின் ஒப்பந்தம் ஏன் அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டது, ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி நிலுவையில் இருக்கும் பொது எப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆகிய கேள்விகள் எழுந்ததையடுத்து இவை விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளன.

    மேலும் கொரோனா பெருந்தொற்று பரவலை கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் செனட் குழுவும் இந்த ஒப்பந்தம் குறித்து விசாரித்து வருகிறது.

    முன்னதாக கோவாக்சின் திறன் குறித்தும் ஐயங்கள் எழுப்பப் பட ஒப்பந்தம் சிக்கலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: