• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 'ஹனுமனின் சஞ்சீவனி தேடலைப்போல' - இந்தியாவிடம் ஹைட்ரோகுளோரோகுயினுக்கு கோரிக்கை விடுத்த பிரேசில்..!

'ஹனுமனின் சஞ்சீவனி தேடலைப்போல' - இந்தியாவிடம் ஹைட்ரோகுளோரோகுயினுக்கு கோரிக்கை விடுத்த பிரேசில்..!

பிரேசில் அதிபர் போல்செனாரோ இந்திய பிரதமர் மோடி உடன் (கோப்புப்படம்)

பிரேசில் அதிபர் போல்செனாரோ இந்திய பிரதமர் மோடி உடன் (கோப்புப்படம்)

  • Share this:
    இமய மலையில் இருந்து இறைவன் ஹனுமன் புனித மருந்தைக் கொண்டுவந்ததைப் போல, இயேசுபிரான் நோயுற்றவர்களை குணப்படுத்தி, பார்டிமூவுக்கு கண் பார்வை அளித்ததைப்போல பிரதமர் மோடியை பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ ஹைட்ரோகுளோரோகுயின் மருத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்து இருந்தது.

    கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு கடந்த வாரம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மருந்துகள் ஏற்றுமதியாகாமல் இருந்ததையடுத்து, மருந்துகள் கிடைக்கவில்லையெனில் அதற்கான பதிலடி தரப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார்.

    அதன்பிறகு, இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதால் கொரோனா அதிகம் பாதித்த பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    இந்நிலையில் ப்ரேசில் அரசும், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தைக் கேட்டிருக்கிறது.

    நமது இருப்பைப் பொறுத்து மிகுதியான தேவையில் உள்ள நாடுகளுக்கு பாராசிட்டமாலும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயினும் அளிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: