எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்தி, ஜிகா வைரஸை முறியடித்த நாடு - அதிபரின் அரசியலால் கொரோனாவின் பிடியில்

”தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்திய சுகாதாரத்துறை அமைச்சரையே பதவி நீக்கம் செய்து அதிர வைத்தார் அதிபர்”

எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்தி, ஜிகா வைரஸை முறியடித்த நாடு - அதிபரின் அரசியலால் கொரோனாவின் பிடியில்
பிரேசிலின் சாவோ பாலோ நகரத்தில் உள்ள கல்லறை (AP)
  • News18
  • Last Updated: May 18, 2020, 7:11 AM IST
  • Share this:
உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி பிரேசில் நான்காம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

1990களில் இலவச மருத்துவம் அளித்து எச்.ஐ.வி. வைரசைக் கட்டுப்படுத்திய தேசம். 2014-ல் கொசுவால் பரவும் ஜிகா வைரசை மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி முறியடித்த நாடு. இந்த பெருமைகளுக்கு சொந்தமான தென் அமெரிக்க நாடான பிரேசில் இன்று கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடியாமல் திண்டாடி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரேநாளில் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் குழப்ப நிலையே பிரேசில் இப்படியொரு மோசமான கட்டத்தில் வந்து நிற்க முக்கியக் காரணமாகும்.


பிரேசில் அதிபரான பொல்சனாரூ, கொரோனா பரவ ஆரம்பித்தது முதற்கொண்டே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தார். ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது அவரது கவலை. ஆனால் அதனையும் மீறி சில மேயர்களும், ஆளுநர்களும் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வீடுகளில இருக்க அறிவுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்களிலும், பேருந்துகளிலும் பொல்சனாரூவின் ஆதரவாளர்கள் ஊர்வலம் சென்றது கொரோனா அச்சத்தை துச்சமென மதித்த அரசியலாகவே இருந்தது.

பிரேசில் அதிபர் போல்செனாரோ இந்திய பிரதமர் மோடி உடன் (கோப்புப்படம்)


நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Luiz Henrique Mandetta கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினார். ஆனால் அதனைக் கண்டித்த அதிபர் கொல்சனாரூ, அமைச்சரை பதவி நீக்கம் செய்தார். கொரோனா சாதாரணமான ஒரு காய்ச்சல்தான் என வாதாடினார்.அவருக்கு பின் ஏப்ரல் 17ல் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக Nelson Teich பதவியேற்றுக் கொண்டார். அதிபரின் எண்ணப்படியே கொரோனா பரிசோதனைகள் பிற நாடுகளை விட குறைவாகவே செய்யப்பட்டன. அதற்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

மயானங்களில் நீண்ட வரிசையில சவக்குழிகள் தோண்டப்பட்டன. மற்றொருபுறம் சாதாரண காய்ச்சலாக கருதியதன் காரணமாக போதிய பாதுகாப்பின்றி பல்லாயிரம் மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அறிகுறி உள்ள மருத்துவப் பணியாளர்களால் கூட சோதனை செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில்தான் உடற்பயிற்சிக் கூடத்தையும், சலூனையும் அத்தியாவசியப் பணிகளாக அறிவித்து உடனே திறக்க அதிபர் பொல்சனாரூ உத்தரவிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த 10 மாகாண ஆளுநர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்று மிரட்டினார். இந்த சூழலில் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் Nelson Teich சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். மலேரியாவுக்கான ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-ம் இடத்திற்கு பிரேசில் உயர்ந்தபோதும் அதிபர் பொல்சனாரூ இப்போதும் சொல்லும் வார்த்தைகள்… ”சில மாகாணங்களின் ஊரடங்கால்தான் இந்த நிலை…” என்பதுதான்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading