கொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு மூளை பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி

அறிகுறி இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கும், பாதிப்பிலிருந்து மீள்பவர்களுக்கும் மூளை பாதிக்கும் அபாயம் இருப்பதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு மூளை பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
படம்: NEXU Science Communication /via Reuters.
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு சேதம் இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவதாகவும் ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சனையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Also see:
கொரோனா வைரஸ் உடலிலிருந்து நீங்கிய பிறகு, நீண்டநாள் கழித்து ஞாபக மறதி, உடல்பலவீனம் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் இதைப்போல் கொரேனாவாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியோர், மூளை பாதிப்பு மற்றும் மனநல பிரச்சனைகளுக்காக மீண்டும் மருத்துவமனையை அணுகிவருவதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தீவிரமான மூளை பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடல்நிலை மோசமாடைவதால், அவர்களை முழுமையாக ஆராய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், கொரோனா மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பை முழுமையாக கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃப்ளு காய்ச்சல் இதேபோன்ற மூளை பாதிப்பை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள விஞ்ஞானிகள், கொரோனா பாதிப்பு நீங்கினாலும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிப்பு தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading