மருத்துவப் பணிக்காக மகனைப் பிரிந்திருந்த தாய்.. மகனைச் சந்தித்த நெகிழ்ச்சி வீடியோ..!

பிரிந்த இருவரும் கண்ணீர் சிந்திய நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

மருத்துவப் பணிக்காக மகனைப் பிரிந்திருந்த தாய்.. மகனைச் சந்தித்த நெகிழ்ச்சி வீடியோ..!
தாயைச் சந்திக்கும் சீன சிறுவன்
  • Share this:
சீனாவில் மருத்துவப் பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருந்த தாயும், அவரது மகனும் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனோ பரவிய தருணத்தில் சிஜியான்ஸுவாங் நகரத்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர் ஹீபெய் மாகாணத்தில் பணியமர்த்தப்பட்டார். ஒரு மாத காலம் தன் குடும்பத்தை பிரிந்து பணிபுரிந்த அவர் ஊர் திரும்பும் தகவல் அறிந்ததும் அவருக்காக வந்து காத்திருந்த அவரது மகன் அவரைத் தேடி ஓடுகிறான். எல்லோரும் முகக்கவசம் அணிந்த நிலையில் தன் தாயை அடையாளம் காண தடுமாறும் அந்தச் சிறுவனைக் கண்டு ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்கிறார் அவனது தாய். பிரிந்த அவர்கள் இணைந்த போது இருவரும் கண்ணீர் சிந்திய நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 


Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading