கொரோனாவை தடுக்கும் என்ற வதந்தியால் எரி சாராயத்தைக் குடித்து 27 பேர் உயிரிழப்பு...!

கொரோனாவை தடுக்கும் என்ற வதந்தியால் எரி சாராயத்தைக் குடித்து 27 பேர் உயிரிழப்பு...!
  • News18
  • Last Updated: March 9, 2020, 7:08 PM IST
  • Share this:
கொரோனா வைரஸை ஆல்கஹால் கட்டுப்படுத்தும் என்ற தவறான தகவலை நம்பி, ஈரானில் எரி சாராயமான மெத்தனாலைக் குடித்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான் நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையிலும், ஈரான் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.

ஈரானின் முன்னாள் தூதரக அதிகாரி ஹூசேன் ஷேக்லெஸ்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். தற்போது வரை, அந்நாட்டில் வைரஸ் பாதிக்கப்பட்டு 237 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.


தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை ஈரான் காலவரையின்றி ரத்து செய்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே, இதற்கு தீர்வு என்று பல தவறான தகவல்கள் வைரசை விட வேகமாக சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆல்கஹால் கொரோனாவை குணப்படுத்தும், பூண்டு கலந்த நீர் கொரோனாவை குணப்படுத்தும் என்று பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதிகம் விபரம் அறியாதவர்கள் கொரோனா தாக்கிவிடக்கூடாது என்ற அச்சத்தில், மேற்கண்ட வதந்திகளை நம்பி அதன்படி செய்கின்றனர். இது அவர்களுக்கு மேலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில், ஆல்கஹால் கொரோனாவை குணப்படுத்தும் என்று பரவிய தவறான தகவல்களால் ஈரானில், 27 பேர் மெத்தனாலைக் (எரி சாராயம்) குடித்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.

குஸெஸ்தான் மாகாணத்தில் 20 பேரும், அல்போர்ஸ் மாகாணத்தில் 7 பேரும் இதுவரை மெத்தனாலை குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும் பல இடங்களில் இதுபோல எரி சாராயம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகிறது.

மேலும், மெத்தனாலைக் குடித்து 218 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “ஆல்கஹால் கொரோனாவை குணப்படுத்தும் என்ற வதந்தியை நம்பியே அவர்கள் மெத்தனாலை அதிகளவில் குடித்து உயிரிழந்ததாக” அஹ்வாஸ் மருத்துவக் கல்லூரி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Also See: கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காட்டுத்தீயாக பரவும் தவறான தகவல்கள்..!

Also See: கொரோனா அப்டேட்: வைரலாகும் 3 வயது குழந்தையின் விழிப்புணர்வு வீடியோ..!
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading