திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு ஜூன் மாதத்துக்கான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் சாமி தரினம் செய்ய பக்தர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படுவது வழக்கம். ஜூன் மாத தரிசனத்துக்கான ஒதுக்கீடு நாளை வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு நிறுத்திவைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மே 30-ம் தேதிவரை தரிசனம் செய்யவும், அறைகளில் தங்குவதற்கும் முன்பதிவு செய்த பக்தர்கள், டிக்கெட்டுகளை ரத்துசெய்துகொள்ளவும், செலுத்திய பணத்தை திருப்பி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில்களில் கடந்த 20-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.