• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • COVID-19 surge:பீகாரில் கங்கை நதியில் மிதந்த 71 உடல்கள் மிகவும் அழுகியநிலையில் மீட்பு- ஒரே குழியில் போட்டு எரிப்பு?

COVID-19 surge:பீகாரில் கங்கை நதியில் மிதந்த 71 உடல்கள் மிகவும் அழுகியநிலையில் மீட்பு- ஒரே குழியில் போட்டு எரிப்பு?

கங்கை நதி. பிரதிநிதித்துவப் படம்

கங்கை நதி. பிரதிநிதித்துவப் படம்

பீகார் புக்சார் மாவட்டத்தில் சவுசாவில் கங்கை நதியில் உடல்கள் மிதந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 71 உடல்கள் கங்கையிலிருந்து மீட்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    சில உடல்களின் மாதிரிகள் மேலும் பரிசோதனை செய்யப்படவுள்ளது. பரிசோதனையில் இறப்புக்குக் காரணம் கொரோனா வைரஸா அல்லது வேறு காரணங்களா என்பது தெரியவரும் என்று மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    இது தொடர்பாக புக்சார் மாவட்ட போலீஸ் உயரதிகாரி நீரஜ் குமார் சிங் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறும்போது, “உடல்கள் மிகவும் அழுகிப்போயிருந்தது. பிரேதப்பரிசோதனையும் செய்யப்பட்டு விட்டது” என்றார்.

    ராம் அஷ்ரே யாதவ் என்ற இடுகாட்டுத் தேவைக்கான விறகு உள்ளிட்டவைகளை விற்கும் நபர் கூறியது மேலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது, அதாவது சவுசாவில் மஹாதியோ கரையில் ஜேசிபி எந்திரத்தினால் தோண்டப்பட்ட பெரிய குழியில் பெரும்பாலான சவங்களைப் போட்டு எரித்ததாகத் தெரிவித்தார்.

    இவரும் ஆங்கில நாளிதழுக்குக் கூறும்போது, “மாவட்ட நிர்வாகம் இதற்காகவென்றே மின்சார ஜெனரேட்டர்களை அளித்தது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பிணம் எரிப்பு இடத்தில் இருந்தனர்” என்றார். இவரிடம் எத்தனை உடல்கள் எரிக்கப்பட்டிருக்கும் என்று கேட்டதற்கு ‘எண்ண முடியவில்லை, ஆனால் இப்போது உடல்கள் நதியில் இல்லை’ என்றார்.

    ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் இதே மாவட்டத்தில் வேறொரு நதிக்கரையில் சில உடல்கள் காணப்பட்டதாகக் கூறுகிறார்.

    உடல்களை மரியாதையுடன் எரிப்போம் என்று புக்சார் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி, அலகாபாத்திலிருந்து இந்த உடல்கள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    “உடல்கள் பெரிதாக விட்டன. உப்பி விட்டன. தண்ணீரில் 5-7 நாட்களாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. எங்கிருந்து வந்தன என்பதை விசாரிக்க வேண்டும். இது வாரணாசி, அலகாபாத்திலிருந்து வந்திருக்கலாம்” என்று மாவட்ட அதிகாரி உபாத்யாய தெரிவித்தார்.

    சமூக ஊடகங்களில் உப்பிய உடல்கள் வீடியோவாக வலம் வந்து வைரலாகியுள்ளன. இதனையடுத்து மக்களிடையே கடும் கோபாவேசம் மூண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி.யிலிருந்து பீகார் சவுசா 10 கிமீ தூரத்தில்தான் உள்ளது.

    முன்னதாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் உத்தரப்பிரதேசத்திலிருந்து கங்கை நதியில் உடல்கள் தூக்கி எறியப்பட்டிருப்பதாக பீகார் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பீகாரில் பாயும் கங்கை நதியில் சுமார் 100 உடல்கள் மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: