நல்ல வரவேற்பை பெற்றுள்ள புளூ டூத் வசதியுடன் கூடிய மாஸ்க்..!

விருதுநகரில் தயாரிக்கப்படும் புளூ டூத் வசதியுடன் கூடிய முகக் கவசத்திற்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

  • Share this:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அசவுகரியமாக எண்ணிக் சிலர் தவிர்க்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, விருதுநகரைச் சேர்ந்த நாகராஜன் புதுமையான முகக் கவசத்தை தயாரித்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் ஏற்கனவே, பசுமை இந்தியா என்ற அமைப்பு மூலம் மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சுவாசக் கோளாறு உள்ளோர், முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வெட்டிவேர் நிரப்பி மூலிகை முகக் கவசம் தயாரித்துள்ளார். இரண்டு அடுக்காகத் தைக்கப்பட்ட காட்டன் துணிக்கு நடுவில், 5 கிராம் அளவு வெட்டிவேர் நிரப்பி, அப்படியே முகக் கவசமாக பயன்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளார்.முதியவர்கள், சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இன்றி, அனைவரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பயன்படுத்தியோர் தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பயன்படுத்தவும், அடிக்கடி முகத்தை தொடாமல் இருக்கவும், புளூ டூத் வசதியுடன் கூடிய, முகக் கசவம் தயாரித்துள்ளதாக நாகராஜன் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை தடுக்க முகக் கசவம் அவசியம் என்ற நிலையல், இதுபோன்ற மூலிகை முகக் கவசத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

 
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading