தமிழகத்தில் ரத்த மாதிரிகள் பரிசோதனை கணிசமாக அதிகரிப்பு!

மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை 9,842 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ரத்த மாதிரிகள் பரிசோதனை கணிசமாக அதிகரிப்பு!
கோப்புப்படம்
  • Share this:
குறைவான அளவில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தற்போது தமிழகத்தில் ரத்த மாதிரிகள் சோதனை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில், குறைவான ரத்த மாதிரிகளே சோதனை செய்யப்பட்டு வருவதாக கடும் விமர்சனங்கள் வந்தன.

ரேபிட் டெஸ்ட் கிட் வந்ததும் சோதனை அதிகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும் ரேபிட் டெஸ்ட் கிட் கிடைப்பதில் கால தாமதம் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகபட்சமாக 1,432 பேருக்கு ரத்தமாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 1,143 மாதிரிகளும், நேற்று முன் தினம் 1,172 மாதிரிகளும் சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை 9,842 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.


Also see:
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading