முகப்பு /செய்தி /கொரோனா / Explainer: கொரோனா நோயாளிகளை தாக்கும் mucormycosis எனப்படும் புதிய நோய்.. இந்த நோயின் அறிகுறிகள் என்ன ?

Explainer: கொரோனா நோயாளிகளை தாக்கும் mucormycosis எனப்படும் புதிய நோய்.. இந்த நோயின் அறிகுறிகள் என்ன ?

சில மாநிலங்களில் கோவிட் வைரஸ் நோயாளிகளிடையே கருப்பு பூஞ்சை என அழைக்கப்படும் மியூக்கோர் மைக்கோசிஸ் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த நோய் இருப்பதை எப்படி கண்டறிவது ?

சில மாநிலங்களில் கோவிட் வைரஸ் நோயாளிகளிடையே கருப்பு பூஞ்சை என அழைக்கப்படும் மியூக்கோர் மைக்கோசிஸ் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த நோய் இருப்பதை எப்படி கண்டறிவது ?

சில மாநிலங்களில் கோவிட் வைரஸ் நோயாளிகளிடையே கருப்பு பூஞ்சை என அழைக்கப்படும் மியூக்கோர் மைக்கோசிஸ் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த நோய் இருப்பதை எப்படி கண்டறிவது ?

  • Last Updated :

மிகவும் அரிதான மற்றும் ஆபத்தான பூஞ்சை தொற்றான மியூக்கோர் மைகோசிஸ்' (mucormycosis) எனப்படும் கருப்பு பூஞ்சை (black fungus), கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தோல், நுரையீரல் மற்றும் மூளையை பாதிக்கும் இந்த தொற்று டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளிடம் இருப்பதாக, தேசிய கொரோனா கண்காணிப்பு குழு தரவுகளின் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மியூக்கோர்மைக்கோசிஸ் நோய் என்றால் என்ன?

மிகவும் அரிதான மற்றும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மியூக்கோர்மைக்கோசிஸ் தொற்று இயற்கையாகவே சுற்றுச்சூழலில் இருக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக அல்லது நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கான திறனைக் குறைக்கும் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்ளும் நபர்களை இந்த தொற்று அதிகம் பாதிக்கிறது என கோவிட் வைரஸ் சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாசிக்கும்போது உள்ளே செல்லும் மியூக்கோர்மைக்கோசிஸ் தொற்று சைனஸ் மற்றும் நுரையீரலை பாதிக்கிறது. கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது மீண்ட பலரிடமும் இந்த தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், ஒரு சிலருக்கு உடனடி அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மியூக்கோர்மைக்கோசிஸ் தொற்று ஏற்பட்டால்?

ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும், ரத்தவாந்தி எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. குழப்பமான மனநிலை, கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி வலி, எரிச்சல் மற்றும் சிவந்துபோகும். இந்த அறிகுறிகள் இருந்தால் மியூக்கோர்மைக்கோசிஸ் தொற்று இருக்க வாய்ப்புகள் உள்ளன.

மேலும் சில அறிகுறிகள்;

மூக்கடைப்பு, நாசியில் எரிச்சல் அல்லது கருப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுதல், கன்னத்தில் உள்ள எலும்புகளில் வலி, ஒரு பக்க முகத்தில் வலி, உணர்வின்மை அல்லது வீக்கம். மூக்கு அல்லது அண்ணத்தின் மேல்பகுதி கருப்பு நிறமாக மாறுதல், பற்களில் தளர்ச்சி, கண் வலியுடன் மங்கலான பார்வை, தோல்களில் புண் ஏற்படுதல், மார்புகளில் வலி, சுவாசம் மோசமடைதல் ஆகியவை கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும். மூக்கடைப்பு ஏற்பட்டாலே பாக்டீரியா தொற்று என சந்தேகிக்க வேண்டாம் எனக் கூறும் மருத்துவர்கள், அறிகுறிகளை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்வதும் நல்லது என விளக்கம் அளித்துள்ளனர்.

சிகிச்சை முறை:

கோவிட் சிகிச்சையில் இருப்பவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், அதிகபட்சமாக அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டை குறைத்து, நோய்தடுப்பு மருந்துகளை நிறுத்துவது இந்த சிகிச்சையில் மிக முக்கியமானது என தெரிவித்துள்ளனர். உடலில் நீரேற்றத்தை நிலை நிறுத்த 4 முதல் 6 வாரங்களுக்கு சலைன் IV (saline (IV), ஆம்போடெரிசின் பி (amphotericin B) ஆகியவற்றுடன் பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர்.

ENT நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், உள்நோய் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்றும், கோவிட் தொற்றில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அறுவை சிகிச்சை தேவை?

மியூக்கோர்மைக்கோசிஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண் மற்றும் மேல் தாடையை இழக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு சில நேரங்களில் மேல் தாடை பிரச்சனையால் மெல்லுதல் மற்றும் முழுங்குவதில் பிரச்சனையை எதிர்கொள்ளும் அவர்கள், முக அழகையும் இழப்பார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கண் மற்றும் தாடைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள நிபுணர்கள், அதற்கு பதிலாக செயற்கையாக அல்லது புரோஸ்டீச்சுகள் கொண்டு சரிசெய்யப்படலாம் என கூறியுள்ளனர். கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு கவுன்சிலிங் அவசியம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். புரோஸ்டீச்சு (prostheses) சிகிச்சை எடுத்துக்கொள்வதாக இருந்தால் தாடை அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பே திட்டமிட வேண்டும் என விளக்கம் கொடுத்துள்ளனர்.

வருமுன் காப்பது எப்படி?

top videos

    மிகவும் அரிதான நோய் என்றாலும், ஒரு குறிப்பிட்ட குழுவினர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, நீரிழிவு நோய், ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நீண்டநாள் ஐ.சி.யூவில் இருந்தவர்கள், வோரிகோனசோல் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், தூசி நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    First published:

    Tags: Corona, COVID-19 Second Wave