Black fungus | பிளாக் பங்கஸ்: மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 52 பேர் உயிரிழப்பு

மாதிரிப்படம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பூஞ்சை என்று கூறப்படும் பிளாக் பங்கஸ் என்ற நோய்க்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 52 பேர் மரணமடைந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    பிளாக் பங்கஸ் என்ற மியுகோர்மைகோசிஸ் (mucormycosis) என்பது முன்பு ஜைகோமைகாசிஸ் (zygomycosis)என்று அழைக்கப்பட்டது. கொரோனா சிகிச்சையில் மிகவும் மோசமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது நிறைய ஸ்டீராய்ட் மருந்துகளைக் கொடுத்துத்தான் பிழைக்க வைப்பார்கள் மருத்துவர்கள்.

    குறிப்பாக கொரோனாவை எதிர்த்து நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகள் தீவிரமாகச் செயல்படும் போது சேதம் ஏற்படாமல் இருக்க ஸ்டீராய்ட் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்டீராய்டினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும்

    பிளாக் பங்கஸ் தாக்கியதற்கான அறிகுறிகள், தலைவலி, காய்ச்சல், கண்களுக்குக் கீழே வலி, மூக்கடைப்பு அல்லது சைனஸ், பார்வை பகுதியளவு மங்கிப் போதல், சில வேளைகளில் கண் பார்வை இழத்தலும் ஏற்படும்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து இதுவரை மகாராஷ்ட்ராவில் 52 பேர் இந்த பிளாக் பங்கஸ் நோய்க்கு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே கொரோனா வந்து குணமடைந்தவர்கள்.

    முதன் முதலாக பிளாக் பங்கஸ் தொற்றுக்கு பலியான கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள் பட்டியலை மகாராஷ்ட்ரா தயாரித்துள்ளது. இப்போது 2ம் அலை தீவிரமடைந்ததால் சுமார் 1,500 பேருக்கு பிளாக் பங்கஸ் தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் அன்று தெரிவித்தது.

    இந்த நோயிலிருந்து மீட்க மகாராஷ்டிரா மாநிலம் Amphotericin-B என்ற பங்கஸ் எதிர்ப்பு மருந்தை இறக்கு மதி செய்வதற்கான டெண்டரை விட்டுள்ளது.

    சர்க்கரை நோய் உள்ளவர்களிடத்தில் இந்த பிளாக் பங்கஸ் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் சர்க்கரை அளவில் அடிக்கடி மாற்றங்கள், ரத்தத்தில் இரும்புச் சத்து அளவுக்கதிகமாக இருப்பது ஆகியவற்றினாலும் பிளாக் பங்கஸ் வருகிறது.

    இந்த பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயில்லாதவர்களுக்கும் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தூண்டிவிடும். இந்தத் தொற்றால் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மூக்கு, மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படும். சில நேரங்களில் கண்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட உடல் உறுப்பையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: