Mucormycosis:நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை தாக்கும் ’கருப்பு பூஞ்சை’..

மியுகோர்மைகாசிஸ்

ஸ்டரோய்ட்கள் பல பலன்கள் கொடுப்பினும், அது ஒரு மனிதனின் கிருமிகளை எதிர்த்து போராடும் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

  • Share this:
    இந்த உலகம் COVID-19 இரண்டாம் அலையில் போராடி கொண்டு இருக்கையில், மியுகோர்மைகாசிஸ் எனப்படும் மற்றொரு பூஞ்சை கிருமி மெதுவாக COVID-19 சிகிச்சையில் உள்ள சிலரை கொன்று வருகிறது. மியுகோர்மைகாசிஸ், "கருப்பு பூஞ்சை" எனவும் அழைக்கப்படும் இது நமது சுற்றுப்புறத்தில் உள்ள மியுகோர்மைசிட்ஸின் உரு மாறிய ஒரு வகை. இந்த நோயை உருவாக்கும் ஏஜென்ட் நிறைய அளவில் இருப்பினும், இது மிக அரிதான நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை மற்றும் நீண்ட நாள் நோய்களான நீரழிவு நோய் உள்ளவர்கள் எளிதில் தாக்கும்.

    COVID-19 நுரையீரலை தாக்கி வீக்கம் உண்டாக்கி ஆக்சிஜன் செயல்படும் நுரையீரலின் தன்மையை குறைக்கும். இதில் இருந்து விடுபட, பல நோயாளிகள் ஸ்டரோய்டு ஊசிகள் பயன்படுத்தி தாக்கத்தை குறைத்துக் கொள்கிறார்கள். ஸ்டரோய்ட்கள் பல பலன்கள் கொடுப்பினும், அது ஒரு மனிதனின் கிருமிகளை எதிர்த்து போராடும் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும். இது போன்றவர்களுக்கு மியுகோர்மைகாசிஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோய் சைனஸ் மற்றும் நுரையீரலை தாக்கும் மேலும் முகத்தின் ஒரு பகுதி வீங்குதல், தீவிர தலைவலி, மூக்கு அடைப்பு, மூக்கின் மீது அல்லது வாய் மேலே கருப்பு லிசன்ஸ், நெஞ்சு வலி, மூச்சு தெனறல் போன்றவை அதன் அறிகுறிகள்.

    ஏற்கனமே நீரழிவு உடன் சிறுநீரகம் சரியாக இல்லாதது, புற்றுநோய், நீண்ட நாள் ஸ்டீராய்டு பயன்பாடு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் குறைவு ( நியூட்ரோபினியா) போன்றவை உள்ளவர்களுக்கு இந்த நோய் கிருமி தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. ஒரு வேளை தொற்று ஏற்பட்டால், ஆன்டி பங்கள் மருந்து நரம்பு வழியாக அல்லது வாய் வழியாக எடுத்துக் கொள்ளலாம், நோய் தொற்று உடைய திசுவை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

    மியுகோர்மைகாசிஸ் போன்றவை அரிதாக இருந்தாலும், பரிந்துரைக்கப்பட்ட முறைகளை அனைவரும் பின்பற்றுவது  கிருமிகளை வராமல் தடுக்கும். இதனை செய்ய, உங்கள் மூச்சு குழாயில் பூஞ்சை துகள்கள் நுழையாமல் தடுக்க சிறந்த வழி முக கவசம் அணிவது. ஒரு N95 முகலவசம் அல்லது இரண்டு முக கவசம் (3 பிளை உள்ளே மற்றும் துணி முக கவசம் வெளியே) போதுமானது என நிரூபிக்கப் பட்டுள்ளது. உங்கள் வீட்டில் மற்றும் சுற்றுப்புறத்தை நல்ல சுகாதாரமாக வைப்பது பூஞ்சை வளர்வதை நன்கு குறைக்கும். இது குறிப்பாக தண்ணீர் தேங்கும் இடங்களில் முக்கிய தேவை. கையுறை, முக கவசம், காலணி போன்ற பாதுகாப்பு கவசங்களை மண்ணை தொடும் முன் போட்டுக் கொண்டால் நல்லது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நீண்ட கால நோய்கள் இருந்தால் மேற்கூறிய பாதுகாப்புகள் எடுத்துக் கொள்வது கிருமியை தவிர்க்கும்.

    இந்தியாவில் COVID-19 தொற்றுக்கு பிந்தைய மியுகோர்மைகாசிஸ் வழக்குகள் அதிகரித்து உள்ளது மேலும் இந்த தொற்று உடையவர்கள் அல்லது COVID-19 தொற்று கொண்டவர்கள் கண்டிப்பாக இந்த பாதுகாப்பினை செய்ய வேண்டும். எவரேனும் மியுகோர்மைகாசிஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவமனையை அணுகி உடனடி சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

    தற்போது பொது சுகாதார அமைப்பு தீவிரமாக COVID-19 சிகிச்சையில் உள்ளது மற்றும் மியுகோர்மைகாசிஸ் இந்தக்கால புதிய கிருமியாக உருவாகி வருகையில், இதற்கான சிகிச்சை குழு அமைக்கையில் மேலும் பாரமாக எண்ணுகிறது. மியுகோர்மைகாசிஸிற்கு தேவையான மருந்து நிறைய இல்லை மற்றும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வும் மிக குறைவு. அதனால் கண்டிப்பாக நமது அமைப்பு இந்த பெரும் கிருமியை எதிர்கொள்ளும் பொழுது, மக்கள் தேவையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு  செயல்களை செய்து மருத்துவ துறையுடன் இணைந்து செயல்படவேண்டும்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: