வீடு வீடாகச் சென்று இட்லி மாவு வழங்கும் புதுச்சேரி பாஜக பொதுச்செயலாளர்...!

”ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வர முடியாத மக்களுக்கு அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்”

வீடு வீடாகச் சென்று இட்லி மாவு வழங்கும் புதுச்சேரி பாஜக பொதுச்செயலாளர்...!
 பாஜக மாநில  பொதுச்செயலாளர்
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுச்சேரியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வர முடியாத மக்களுக்கு அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், மக்களை வீடுவீடாக தேடி சென்று இட்லி மாவினை வழங்கிவருகிறார். மணவெலி தொகுதிக்குட்பட்ட 11 ஆயிரம் குடும்பங்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதால் அவர்களை தேடி சென்று தினமும்  குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ இட்லி மாவினை அவர் வழங்குகிறார்.

இதற்காக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் இயங்கும் அரோமா நிறுவனத்தின் சார்பில் இவர் தினமும் காலை 6 மணிக்கு இட்லி மாவினை பெற்று மக்களுக்கு காலை 8 மணிக்குள் வழங்குகிறார். கடந்த ஒருவாரமாக இந்த இட்லி மாவினை அவர் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading