இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி: கனடாவில் வைக்கப்பட்ட மிகப்பெரிய நன்றி பலகை

கனடாவில் டொராண்டோவில் மோடிக்கு வைக்கப்பட்ட நன்றிப் பலகை. | ஏ.என்.ஐ.

ஆஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு வாக்சின் கனடாவுக்கு அனுப்பப்பட்டது . இதற்கு அடுத்த அனுப்பீடாக 1.5 மில்லியன் டோஸ்கள் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளது.

 • Share this:
  கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 5 லட்சம் டோஸ்களை கனடாவுக்கு இந்தியா கடந்த புதனன்று அனுப்பியது.

  ஆஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு வாக்சின் கனடாவுக்கு அனுப்பப்பட்டது . இதற்கு அடுத்த அனுப்பீடாக 1.5 மில்லியன் டோஸ்கள் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமரிடம் இந்த மாதத் தொடக்கத்தில் பேசினார். அப்போது கனடாவின் கொரோனா பிரச்சினைகளில் வாக்சின் மூலம் இந்தியா பங்கெடுத்து தீர்த்து வைக்கும் என்றார்.

  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியுவும் பிரதமர் மோடியைப் பாராட்டும் போது, “உலகமே கோவிட்19-ஐ வெல்ல வேண்டுமெனில் அதற்கு இந்தியாவின் தடுப்பூசிப் பங்களிப்பு பெரிய அளவில் உதவுகிறது. ஏனெனில் இந்தியாவின் மருந்து உற்பத்தித் திறன் அப்படி. பிரதமர் மோடி அந்த உற்பத்தித் திறனை உலகுடன் பகிர்ந்து கொள்கிறார்” என்று பெரிய அளவில் புகழ்ந்து பேசினார்.

  ஆனால் கனடா இன்னும் ஒரு படி மேலே போய் கிரேட்டர் டொராண்டோவில் பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகமான, “நன்றி! இந்தியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. கனடாவுக்கு கோவிட் 19 வாக்சின் அனுப்பியதற்கு நன்றி, லாங் லிவ் கனடா, இந்தியா உறவுகள்” என்று வாசகத்துடன் பெரிய பில்போர்டு ஒன்றை வைத்துள்ளது.

  இது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. உலகம் முழுதும் கொரோனா நோய்க்காக சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 17 லட்சத்து 55 ஆயிரத்து எட்டு ஆக உள்ளது.

  கொரோனா பலி எண்ணிக்கை 26 லட்சத்து 32 ஆயிரத்து 74 ஆக உள்ளது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 191 ஆக உள்ளது. கனடாவில் கொரோனா பலி எண்ணிக்கை 22,335 என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: