• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • முதல் நாளில் 16.91 லட்சம், அடுத்த நாளில் 5 ஆயிரத்துக்கும் கீழ்:  ம.பி. தடுப்பூசி எண்ணிக்கை குறைந்தது!

முதல் நாளில் 16.91 லட்சம், அடுத்த நாளில் 5 ஆயிரத்துக்கும் கீழ்:  ம.பி. தடுப்பூசி எண்ணிக்கை குறைந்தது!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கடந்த திங்களன்று நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 16 லட்சத்து 91 ஆயிரத்து  967 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று வெகுவாக குறைந்தது. அதாவது, நேற்று வெறும் 4,842 பேருக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது

  • Share this:
மத்திய பிரதேசத்தில் கடந்த திங்களன்று நாட்டிலேயே இல்லாத அளவாக 16 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்பின்பு கடந்த மே 1ஆம் தேதியில் இருந்து 18 வயது அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வந்த மத்திய அரசு, நேற்று முன்தினம் முதல் 18ல் இருந்து 45 வயது வரை உடையவர்களுக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக கொடுக்கிறது. இந்த சூழலில் சர்வதேச யோகா தினமான நேற்று முன்தினம் ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக 85,96,807 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு  ஒரே நாளில் 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே  இந்தியாவில் அதிகபட்சமாக இருந்தது. ஜூன் மாதத்தில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 31 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

கடந்த திங்களன்று நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 16 லட்சத்து 91 ஆயிரத்து  967 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று வெகுவாக குறைந்தது. அதாவது, நேற்று வெறும் 4,842 பேருக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தடுப்பூசியை வழங்குவதில் உள்ள இடைவெளி  காரணமாக தடுப்பூசி செலுத்துவது குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:  மூன்று மாநிலங்களில் அதிகமாக இருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ்...

ஹரியானாவில் திங்களன்று 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம்  74 ஆயிரமாக இந்த எண்ணிக்கை குறைந்தது.  அதேவேளையில், நேற்றைய தினம் மொத்தம் 51 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: