• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • “அடையாளம் முக்கியமல்ல, சேவையே தேவை" - முகமூடி அணிந்து உதவும் போபால் இளைஞர்கள்!

“அடையாளம் முக்கியமல்ல, சேவையே தேவை" - முகமூடி அணிந்து உதவும் போபால் இளைஞர்கள்!

போபால் மக்களுக்கு கைஃபாக்ஸ் முகமூடி அணிந்து இளைஞர்கள் உதவி

போபால் மக்களுக்கு கைஃபாக்ஸ் முகமூடி அணிந்து இளைஞர்கள் உதவி

கொரோனா லாக்டவுனில் பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு கைஃபாக்ஸ் முகமூடி அணிந்து இளைஞர்கள் உதவி செய்து வருகின்றனர்.

  • Share this:
மக்களை துன்புறுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என மக்கள் காத்திருக்கின்றன. அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு, கட்டுப்பாடுகள் ஆகியவை இயல்பான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர்கள்கூட பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

130 கோடி மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் இன்றைய சூழலில் பெரும்பாலானோருக்கு ஏதாவதொரு வகையில் உதவி தேவைப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் மனிதநேயமிக்க பலர் தன்னலம் கருதாது, களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

மருத்துவம், உணவு மற்றும் பணம் சார்ந்த உதவிகள் பலருக்கும் பிரதானமாக தேவைப்படுகிறது. அந்தவகையில் போபாலைச் சேர்ந்த 4 இளைஞர்கள் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் உதவி செய்வதைவிட, அதனை வழங்கும் முறையிலேயே வித்தியாசமாகத் தெரிகின்றனர். தேவைப்படுபவர்களுக்கு தேடிச் சென்று உதவும் அவர்கள், அந்த உதவியை வழங்கும்போது முகமூடி அணிந்து இருக்கின்றனர். உணவுப் பொருட்கள் வழங்கும்போதெல்லாம் கைஃபாக்ஸ் முகமூடியை அணிந்து கொள்கின்றனர்.

ALSO READ |  தடுப்பூசி போட்டால் மட்டுமே திருமணம் - புது உத்தரவு

அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்ற அடையாளம் மக்களுக்கு தெரியக்கூடாது, தங்களுடைய உதவி மட்டுமே மக்களை சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நிவாரணப் பொருட்கள் வழங்கும்போது புகைப்படம் எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், அவர்களின் சேவையை பார்த்து நெகிழ்ந்த சிலர், முகமூடி அணிந்த இளைஞர்களின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டனர். அவர்களைப் பற்றி விசாரித்தபோது, போபால் நகரைச் சேர்ந்த முஜீப், முபீன், அப்துல் ரஹ்மான், ராஜ் லோதி என தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பேசிய முஜீப், "கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டிருந்தோம். ரம்ஜானுக்கு முன்பு எங்களுடைய மாமா இம்ரான் துபாயில் இருந்து வீடு திரும்பினார். நாங்கள் செய்து கொண்டிருக்கும் உதவியை பார்த்து பாராட்டிய அவர், உதவி செய்வது மட்டுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். நாம் யார் என்பதை ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கூறினார். அதன்பிறகு நாங்கள் உதவி செய்யச் செல்லும்போதெல்லாம் முகமூடியை அணிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டோம். கடந்த ஒரு மாதமாக முகமூடி அணிந்து கொண்டே மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ALSO READ |  கொரோனாவுக்கு எதிரான புதிய நம்பிக்கை: மீண்டவர்கள், தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு- ஆய்வில் தகவல்

ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், சுண்டல், துவரம் பருப்பு, அரிசி 3 கிலோ, ஒரு கிலோ உப்பு, இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள், அரைக்கிலோ டீ த்தூள் பாக்கெட், ஒரு கிலோ சர்க்கரை ஆகிய பொருட்களை கொடுக்கும் அவர்கள், தங்கள் சொந்த பணத்தில் மட்டுமே இதனை செய்கின்றனர்.

பலர் நிதியுதவி அளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதனை பெற்றுக்கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை எனக் கூறும் இளைஞர்கள், விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று உதவட்டும் என கூறுகின்றனர்.

ALSO READ |  கொரோனாவால் 65 வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

தாங்கள் யாரிடமும் பணம் வாங்காமல், சொந்த பணத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர். இளைஞர்களின் இந்த முயற்சி மற்றவர்களுக்கும் முன்னுதாரமாக இருப்பதாக பலரும் பாரட்டியுள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: