Covaxin | டெல்லிக்கு கோவாக்சின் அனுப்பாதீர்கள் என மத்திய அரசு உத்தரவு- ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

கோவேக்சின்

மத்திய அரசின் உத்தரவின் பேரில்தான் பாரத் பயோடெக் நிறுவனம் தலைநகர் டெல்லிக்குத் தேவைப்பட்ட 67 லட்சம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க மறுத்தது என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

  • Share this:
    செய்தியாளர்கள் சந்திப்பின் போது மணீஷ் சிசோடியா கூறும் போது, டெல்லிக்காக கொரோனா தடுப்பூசிகள் 1.34 கோடி டோஸ்கள் கேட்டிருந்தோம். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் முறையே 67 லட்சம் டோஸ்கள் கேட்டிருந்தோம்.

    அதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படுவதால் தங்களால் அனுப்பவியலாது என்று பாரத் பயோ டெக் நிறுவமன் மறுத்து விட்டது.

    எனவே மத்திய அரசு அதிகாரிகள் என்று பாரத் பயோடெக் குறிப்பிடுகிறது என்றால் அது நிச்சயம் மத்திய அரசின் வழிகாட்டுதல்களாகவே இருக்க வேண்டும்.

    மேலும், “கூடுதல் சப்ளைகள் நீங்கள் கேட்கிறீர்கள் ஆனால் எங்களால் சப்ளை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று எழுதியுள்ளனர். இதற்காக வருத்தம் தெரிவித்தனர்.

    மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி டோஸ்கள் சென்றிருக்கின்றன என்று தெரியவில்லை, ஆனால் டெல்லிக்கு கேட்ட போது மத்திய அரசின் வழிகாட்டுதல்களைக் காட்டி சப்ளை மறுக்கப்பட்டது.

    நான் மீண்டும் கூறுகிறேன் 6.6 கோடி வாக்சின்களை ஏற்றுமதி செய்தது மிகப்பெரிய தவறு. இதனால் 17 கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படும் மையங்களை நாங்கள் இழுத்து மூட நேரிட்டுள்ளது.

    எங்களிடம் கையிருப்பு வாக்சின்களும் முடிந்து விட்டன. கோவிஷீல்ட் அனுப்பினால் கோவாக்சின் மையங்களை மூடத்தானே வேண்டும். இதனையடுத்து 17 பள்ளிகளில் நடத்திய நூற்றுக் கணக்கான கோவாக்சின் தடுப்பூசி மையங்களை மூட நேரிட்டது.

    மத்திய அரசு ஒரு நாட்டின் அரசாகச் செயல்பட வேண்டும். முதலில் வாக்சின் ஏற்றுமதிகளை நிறுத்த வேண்டும், பிறகு மேலும் கூடுதல் நிறுவனங்கள் வாக்சின் தயாரிக்க வேண்டும்.

    மாநில அரசுகளுக்காக தடுப்பூசிகளை இறக்கும்தி செய்வது மத்திய அரசின் கடமையாகும். மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும், இதுதான் முக்கியம், என்றார்.

    பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் தங்களது தடுப்பூசி உற்பத்தியில் 50%-ஐ மத்திய அரசுக்கு அளித்தாக வேண்டும், மீதி 50%-ல்தான் மாநில அரசுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும்.
    Published by:Muthukumar
    First published: